திருமுறைகள் பழந்தமிழ் இசையையொட்டிய பண்களுடன் பாடப்பட்டு வருகின்றன. சைவக் கோயில்களிலும், சைவர்கள் வீடுகளிலும், பாடசாலை முதலிய இடங்களில், சமய நிகழ்ச்சிகளின் போதும் திருமுறைகள் இன்றளவும் பாடப்பட்டு வருகின்றன. இவை பன்னிரு திருமுறைகள் என்று அழைக்கப்படுகிறது.
திருச்சிற்றம்பலம்
உலக
சைவப் பேரவை – அவுஸ்திரேலியா திருமுறைமுற்றோதல் வரலாறு
அருளாளர்கள் இறைவனைப் போற்றிப் பாடிய திருமுறைப்பாடல்கள்
18,000 இற்கு மேற்பட்டவையாகும். இயந்திர வாழ்க்கையில்
இயங்கிக்கொண்டிருக்கும் எங்களுக்கு அனைத்தையும் கற்பதோ பாராயணம் செய்வதோ எல்லோருக்கும் இயழுமான காரியமில்லை. எனவே திருமுறைப்பாடல்களை
எமது வாழ்நாளில் ஒருமுறையாவது நாங்களும் முற்று முழுதாக இயன்றவரை பண்ணோடு போற்றிப்
பாடி வணங்கி வழிபடவேண்டும் என்ற ஆர்வத்துடன் ஆரம்பிக்கப்பட்டதே இத்திருமுறை முற்றோதல்
நிகழ்வாகும்.
உலக சைவப் பேரவை அவுஸ்திரேலியாக் கிளை திருமுறை முற்றோதலை
எவ்வாறு ஆரம்பித்து 14 வருடங்களிற்குப் பின்னர் எவ்வாறு நிறைவேற்றியது என்பது பற்றிய
ஒரு சில வார்த்தைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக மகிழ்ச்சி அடைகின்றேன்.
உலகசைவப் பேரவையின் 10ஆவது உலக சைவ மாநாடு சிட்னியில் சைவமன்றத்தின்
ஆதரவில் 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து 13/08/2006 இல் நடைபெற்ற உலக சைவப் பேரவை அவுஸ்திரேலியாக் கிளையின்
அங்குரார்ப்பணக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட
தீர்மானங்களின் ஒன்றாக சைவ சித்தாந்த வகுப்புக்களை நடாத்துவதுடன் திருமுறை முற்றோதலையும் நடாத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.
இத்தீர்மானத்திற்கு
அமைய 03/09/2006 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரை முதலாவது திருமுறை
முற்றோதல் நிகழ்வு 40 இற்கு மேற்பட்டோரின் பங்கேற்புடன் ஹோம்புஷ் ஆரம்ப பாடசாலையில்
ஹோம்புஷ் தமிழ் கல்வி நிலையத்தின் ஆதரவுடன் ஆரம்பமானது. இந்நிகழ்வில் பண்ணோடு பாடுபவர்கள்
திருமுறைகளை சொல்லிக்கொடுக்க மற்றோர் அவ்வரிகளை திரும்பப் பாடி ஆரம்பித்து வைத்தார்கள்.
தொடர்ந்து நடைபெற்ற திருமுறை முற்றோதல் நிகழ்வுகளில் சிட்னியில் உள்ள பண்ணிசையில் புகழ்
பெற்ற பண்ணிசை வேந்தர் இராசரத்தினம் ஐயா, காலம் சென்ற மாணிக்கவாசகர் ஐயா, பாலம் லக்சுமணன்
அம்மா , திருமதி மகேந்திரன் அம்மா அவர்கள் பண்ணோடு சொல்லிக் கொடுக்க ஏனையோர் திரும்பப்
பாடி வந்தார்கள். நாளடைவில் பங்கு பற்றுவோர் எல்லோரும் திருமுறைப் பாடல்களை சொல்லிக்கொடுக்கும் வழமை ஏற்படுத்தப்பட்டு விரும்பியோர்
எல்லோருக்கும் சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டடது.
ஆரம்பத்தில் பண்ணிசை வேந்தர் இராசரத்தினம் ஐயா, வணக்கப் பாடல்களை
(நால்வர் வணக்கம், நந்தியெம்பெருமான் வணக்கம், சந்தான குரவர் வணக்கம், நாயன்மார் வணக்கம்
, விநாயகர் வணக்கம்) பாடி ஆரம்பித்து வைக்க , காலம் சென்ற மாணிக்கவாசகர் ஐயா நிறைவுப் பாடல்களை
( பெரிய புராணம், சண்டிகேசுவரர் வணக்கம், கந்தபுராணம், பிழை பொறுக்க வேண்டுதல், கந்தரனுபூதி
இறுதிப்பாடலுடன் ) மங்களம் பாடி நிறைவு பெற்று வருவது வழக்கமாக இருந்தது. தற்போதும்
இயன்றவரை பண்ணோடு பாடுபவர்கள் ஆரம்பப்பாடல்களையும் நிறைவுப்பாடல்களையும் பாடி வருகின்றார்கள்.
கடந்த
நான்கு வருடங்களாக (12ம் திருமுறை ஆரம்பம் முதல்) திருத்தொண்டத் தொகை பாடல்களையும்
ஆரம்பத்தில் பாடி வருகின்றோம்.
திருமுறை முற்றோதல் ஆரம்பித்து ஆறு மாதங்களின் பின்னர் மேலதிகமாக
காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை அன்றையதினம் பாடும் பதிகங்களில் ஒன்றிற்கு பங்குபற்றுவோர்களில்
ஒருவரோ அல்லது இங்கு வருகை தரும் சைவ அன்பர்களோ, கூடுதலாக வெளிநாட்டிலிருந்து வரும்
அன்பர்கள் (Prof Vijeyalakshmi Ramasami,
Prof T Rajagopalan, Prof Nallasivam, Mr
Thanikaivelan, Dr Arangasami) போன்றோரும்,
Mr N Mahesan , Dr Ganesalingam ,Dr Vadivelau, Mrs Balam Lakshmanan, Mr
Nanthivarman, ) உள்நாட்டு அன்பர்களும் பொருள் கூறும் வழமை ஆரம்பமானது. அத்தோடு எமது
சைவப் பேரவையின் செயற்குழு அங்கத்தவர்கள் பலர் இப்பதிகங்களுக்கு பொருள் கூறியுள்ளார்கள்.
ஆரம்ப காலத்தில் சிட்னி முருகன் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று மாலை 11.00 மணி முதல்
12.00 மணி வரை உலக சைவப் பேரவை திருமுறை முற்றோதலை நடாத்திவந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
2016ம் ஆண்டு பிற்பகுதியிலிருந்து, சேக்கிழார் பெருமானின்
12ம் திருமுறை ஆரம்பிக்கப்பட்டு பெரியபுரானத்தின் ஒவ்வொரு பாடலுக்கும் பொருள் சொல்லும்
வழமை தொடங்கப்பட்டு, காலை 9.15 மணி முதல் 12.30 மணி வரை நடைபெற்றது. பின்னர் ஒரு சிலரின்
நேர வசதி கருதி March 2018 முதல் இன்று வரை காலை 9.45 மணி முதல் 12.30 மணி வரை நடைபெற்று
வருகின்றது. பெரியபுராணத்திற்கு ஒவ்வொரு பாடலுக்கும் பொருள் கூறி வந்தபடியால் ஏறக்குறைய
நான்கு வருடங்கள் இத்திருமுறைக்கு மாத்திரம் எடுத்துள்ளது.
ஆரம்பத்திலிருந்து 12 வருடங்கள் ஹோம்புஷ் ஆரம்ப பாடசாலையில் நடைபெற்றுவந்த திருமுறை
முற்றோதல் தவிர்க்கமுடியாத காரணங்களால் 2018ம் ஆண்டிற்குப் பின்னர் அங்கு நடாத்தமுடியாத
நிலை ஏற்பட்டது. இறைவன் திருவருளால் திரு Logathasan அவர்களின் உதவியுடன் 2019ம் ஆண்டு
ஆரம்பத்திலிருந்துParamatta இல் அமைந்துள்ள TamilCo மண்டபத்தில் நடைபெற்று வந்தது.
Covid -19 காரணமாக April 2020- முதல் zoom
வழியாகவே திருமுறை முற்றோதல் இன்று வரை நடைபெற்றுவருகின்றது.
Zoom வழியாக நடைபெறும்போது Melbourne,
India போன்ற தூர இடத்திலுள்ள அன்பர்களும் பங்கு
பற்றி வருகின்றார்கள்.
இத்தருணத்தில் இதுவரை காலமும் உலக சைவப் பேரவைக்கு திருமுறை
முற்றோதலை நடாத்துவதற்கு எதுவித கட்டணமும் இன்றி
இட வசதி அளித்த ஹோம்புஷ் தமிழ் கல்வி நிலையம், மற்றும் Tamilco (thiru
Logathasan) ஆகியோருக்கு எமது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
திருமுறைகளைப் பங்கு பற்றுவோர் பாடுவதற்கு வசதியாக ஆரம்பத்தில்,
காலம் சென்ற கலாநிதி வடிவேலு அவர்களின் website (Saivatamil.com) உள்ள முதலாவது திருமுறையில்
உள்ள பாடல்களை ஒவ்வொரு மாதமும் தேவையானவற்றை அச்சிட்டு பாவித்தோம். இரண்டாம் மூன்றாம்
திருமுறைகளுக்கு திருவாவடு துறை ஆதீனம்அச்சிட்டு வெளியிட்ட புத்தகங்களை தருவித்துப்
பாவித்தோம். பின்னர் நான்கு முதல் எட்டாம் திருமுறை வரை உள்ள திருமுறைகளை காலம் சென்ற
கலாநிதி வடிவேலு அவர்கள் தலக்குறிப்பு, பதிகச்சிறப்புடன் தொகுத்துத் தர சிட்னியில்
பதிப்பித்து பாவித்துவந்தோம். ஒன்பதாம், பத்தாம், பதினொன்றாம், பன்னிரண்டாம் திருமுறைகளுக்கு
திருப்பனந்தாள் காசித் திருமடம் வெளியிட்ட புத்தகங்களைத் தருவித்துப் பாவித்தோம். பன்னிரண்டாம் திருமுறைக்கு thevaaram.org website இலிருந்து ஒவ்வொரு பாடலுக்குரிய பொருளை ஒவ்வொரு
நிகழ்வுக்கும் முற்கூட்டியே தயார் செய்து வரும் அன்பர் ஒருவர் கூற திருமுறை முற்றோதலைத்
தொடர்ந்து நிறைவேற்றினோம்.
திருமுறை முற்றோதல் 2006 இல் ஆரம்பமகி ஓரிரண்டுஆண்டுகளிற்குப்
பின்னர் திருமுறை முற்றோதலில் பங்கு பற்றுவோர்களது எண்ணிக்கை குறைவதைத் தொடந்து சிட்னி முருகன் ஆலயம் நடாத்தும், சைவப்
பாடசாலை மாணவர்களையும், இளைஞர்களையும் இணைப்பதற்கு உலக சைவப் பேரவை அணுகி ஓரளவு முன்னேற்றத்தையும்
கண்டது. ஆனால் அவர்களும் தற்போது பங்குபற்றுவது மிக அருமையாகிவிட்டது. அதோடு நின்று
விடாமல் ஒவ்வொரு மாதநிகழ்வையும் பங்கு பற்றுவோர் தமதோ அல்லது அவர்களின் குடும்ப அங்கத்தவர்களினதோ
பிறந்த தினம், திருமண தினம் போன்றவற்றை sponsor பண்ணுவது மூலம் பங்கு பற்றுவோர்களது
எண்ணிக்கையை கூட்டுவதற்கு முயற்சி செய்து முன்னேற்றதையும் கண்டது. ஆனால் அதுவும் தற்போது
நின்றுபோய்விட்டது.
ஓவ்வொரு திருமுறை முற்றோதலின் நிறைவில் பங்கு பற்றியோருக்கு
பிரசாதம் வழங்குவது வழக்கமாகவுள்ளது. முதலாம் திருமுறை நிறைவு 02/09/2007 இல் சரியாக
ஒரு வருடத்தின் பின்னர் நடைபெற்றபோது அந்நிகழ்வை
கொண்டாடும் முகமாக பங்குபற்றியோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
திருச்சிற்றம்பலம்.
தொகுப்பு: திரு கணபதிப்பிள்ளை சபாநாதன்
created with
Best Free Website Builder .